தனிநபர் மட்டுமல்லாது தற்போது ஒரு நிறுவனம், அதன் நிர்வாக இயக்குநர், பங்குதாரர், அறங்காவலர், ஆசிரியர், நிறுவனர், செயலாளர், தலைமை நிர்வாக அதிகாரி, நிறுவனத்தின் முதன்மை அதிகாரி உள்ளிட்ட அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பான் எண்ணைப் பெற வேண்டும். நிதியாண்டில் ரூ.2 லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண பரிமாற்றத்திற்கு, நிறுவனங்கள் அவசியம் பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பான் அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தில் திருநங்கைகளுக்கு தனியிடம்! - GOT OPTION
பான் அட்டை விண்ணப்ப படிவத்தில் திருநங்கைகளுக்கு என தனி விருப்பத் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிறுவனங்கள், பான் எண்ணை பெற, மே மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள், பான் எண்ணை பெற விண்ணப்பிக்கும்போது தந்தையின் பெயர் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. தந்தை இல்லாமல், தாய் மட்டும் இருக்கும்பட்சத்திலும், இது கட்டாயமாக உள்ளது. பான் அட்டையில், தாய் பெயரும் இடம்பெற வழிவகை மேற்கொள்ள, பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் வந்த நிலையில், மத்திய அரசு இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.
பான் அட்டை விண்ணப்ப படிவத்தில் பாலினத்தை குறிப்பிடும் பிரிவில், ஆண், பெண் என இரண்டு தேர்வுகளே இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், மூன்றாம் பாலினத்தவரை குறிப்பிடும் வகையில் திருநங்கை என்ற விருப்பத் தேர்வும் விண்ணப்ப படிவத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.