தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'ரூ.5 லட்சம் கோடி டாலர் பொருளாதார' இலக்குக்கு நிதி ஆயோக் சி.இ.ஓ சொல்லும் யோசனை

டெல்லி: 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார அளவுள்ள நாடாக இந்தியா உருவாக மாநில அரசுகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என நிதி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார்.

Amit

By

Published : Sep 7, 2019, 7:47 PM IST

தொழிற்துறை கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் அமிதாப் கந்த் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், 'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு துறைகளில் அடிப்படை சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இரட்டை இலக்க ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தை அடையும் திறனை இந்தியா பெற்றுள்ளது. ' என்றார்.

மேலும் பேசிய அவர், 'வரும் 2024ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார அளவுள்ள நாடாக இந்தியா முன்னேற வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேபோல் 2030க்குள் 10 லட்சம் கோடி டாலராக அதை உயர்த்தவும் இந்தியாவுக்கு மனிதவளத்திறன் உள்ளது. ஆனால் அதற்கான முக்கிய பங்களிப்பை மாநில அரசுகள்தான் தர வேண்டும். இதற்காக மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் பொருளாதார மந்தநிலை தீவிரமடைந்துள்ள நிலையில் நிதி ஆயோக் சி.இ.ஓ கூறியுள்ள இக்கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details