தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

2 நாளுக்கு ஒருமுறை கடை - எப்படி இருக்கிறது ரிச்சி ஸ்ட்ரீட்?

சென்னை: கரோனா வைரஸ் பரவல் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த சென்னையின் பிரதான எலக்ட்ரானிக் சந்தையான ரிச்சி ஸ்ட்ரீட் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

street
street

By

Published : May 26, 2020, 4:29 PM IST

Updated : May 26, 2020, 6:54 PM IST

சென்னையின் மையமான அண்ணா சாலைக்கு அருகே உள்ள மிகப்பெரிய எலக்ட்ரானிக் சந்தை ரிச்சி ஸ்ட்ரீட். இங்கு இல்லாத மின்னணு பொருட்களே இல்லை என்று சொல்லும் வகையில், 2000க்கும் மேற்பட்ட கடைகளில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வர். எப்போதும் திருவிழா மைதானம் போல் காட்சியளிக்கும் ரிச்சி தெரு, 60 நாட்களைக் கடந்து தற்போது மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இங்கு கூட்டம் கூடுவதை தவிர்க்க, புதிய முறையை கடைபிடிக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதாவது 1, 3, 5 போன்ற ஒற்றைப்படை எண் கொண்ட கடைகளுக்கு சிவப்பு நிற ஸ்டிக்கர் வழங்கப்பட்டு, அவற்றை திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே திறக்க முடியும். அதேபோல் 2, 4, 6 என்ற இரட்டைப்படை எண் கொண்ட கடைகள் பச்சை நிற ஸ்டிக்கருடன் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1, 3, 5 போன்ற ஒற்றைப்படை எண் கொண்ட கடைகளுக்கு சிவப்பு நிற ஸ்டிக்கர்
2, 4, 6 என்ற இரட்டைப்படை எண் கொண்ட கடைகளுக்கு பச்சை நிற ஸ்டிக்கர்

பல நாட்களாக வியாபாரம் நடைபெறாததால், ரிச்சி தெருவில் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தொழில் முடக்கத்தால் கடை வாடகை, தொழிலாளர்களுக்கு சம்பளம், மின்சாரக் கட்டணம் உள்ளிட்டவை மிகவும் சிரமமாக உள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது ரிச்சி தெரு என்று அழைக்கப்படும் மீரா சாஹிப் தெரு, வாலர்ஸ் தெரு, நரசிங்கபுரம் தெரு, முகமது உசேன் சாஹிப் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்பட்டாலும் பொது போக்குவரத்து வசதியில்லாமல் பொதுமக்கள் வரமுடியாததாலும், வாகனங்கள் அனுமதிக்கப்படாததாலும் ரிச்சி தெருவில் வியாபாரம் மிகவும் மந்தமாகவே காணப்படுகிறது.

2 நாளுக்கு ஒருமுறை கடை - எப்படி இருக்கிறது ரிச்சி ஸ்ட்ரீட்?

இதையும் படிங்க: ஊரடங்கு எதிரொலி : 450 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பெங்களூரு நிறுவனம்

Last Updated : May 26, 2020, 6:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details