இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இது குறுந்தொழில் மேம்பாடு; மறுநிதி நிறுவனம் - முத்ரா (Micro Units Development and Refinance Agency - MUDRA) மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த முத்ரா திட்டம் மத்திய அரசின் ஒரு திட்டமாகும்.
இந்த முத்ரா திட்டத்தில் மூன்று பிரிவுகளில் தற்போது வங்கிகள் கடன் வழங்கிவருகின்றன. அதோடு இந்த முத்ரா திட்டத்தின் கீழ் சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு ரூ.50,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் தற்போது ரூ.20 லட்சம் வரை அடமானமில்லா இந்தக் கடனை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக் குழு.
குறிப்பாகக் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. அதில் சிசு, கிஷோர், தருண் ஆகிய மூன்று திட்டங்களின் மூலம் கடன் வழங்கப்பட்டுவருகிறது.
- சிசு (SHISHU) - இத்திட்டம் மூலமாக ரூ.50,000 வரை கடன் பெறலாம்.
- கிஷோர் (KISHOR) - இத்திட்டம் மூலமாக ரூ.50,000 - 5 லட்சம் வரை கடன் பெறலாம்.
- தருண் (TARUN) - இத்திட்டம் மூலமாக ரூ.5 லட்சம் - 10 லட்சம் வரை கடன் பெறலாம்