மும்பை: இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 6) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் பேசியதை சுருக்கமாக காணலாம்.
- 2020 முதல் பாதியில் உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் பலவீனமாக உள்ளன.
- கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் குறைந்துள்ளன
- பொருளாதார நடவடிக்கைகள் மீண்ட நேரத்தில், ஊரடங்கு விதிக்கப்படுவதால் மீண்டும் பொருளாதாரத்தில் மந்தம் ஏற்பட்டுள்ளது.
- ஆண்டின் முதல் பாதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறைவாக இருக்கும்.