மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்துகளையும் பாராட்டுகளையும் பகிர்ந்துகொண்டார்.
அப்போது, “தொலைநோக்குப் பார்வையும், அதற்கான செயல்திட்டமும் கொண்ட இந்த தசாப்தத்தின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் மற்றும் அவரது குழுவினருக்கு எனது பாராட்டுகள்.
நாட்டின் வேலைவாய்ப்பை உருவாக்கும் முக்கியத் துறைகளான விவசாயம், உள்கட்டமைப்பு, ஜவுளித்துறை, தொழில்நுட்பத்துறைகளில் பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது. இது தற்கால சந்ததியினரின் வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவும்.