தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஜி.எஸ்.டி திட்டத்தை விளாசித் தள்ளிய நிதிக்குழு தலைவர்

மும்பை: நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி திட்டம் தொடர் குளறுபடிகளால் பொருளாதாரத்தைப் பாதித்துவருவதாக 15ஆவது நிதிக்குழு தலைவர் என்.கே. சிங் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

By

Published : Nov 23, 2019, 6:53 PM IST

NK Singh

நாட்டின் 15ஆவது நிதிக்குழு தலைவராகப் பொருளாதார நிபுணரான என்.கே. சிங் செயல்பட்டுவருகிறார். நாட்டின் தொழில்துறை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய என்.கே. சிங், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி குறித்து காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், தற்போதைய நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி பெரும் குளறுபடியில் உள்ளது எனவும், தொடர்ச்சியாக ஜி.எஸ்.டியில் நிதியமைச்சகம் கொண்டுவரும் மாற்றங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையே முடக்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜி.எஸ்.டி வரி எளிமைப்படுத்தப்படாத பட்சத்தில் அதன் நோக்கமே தோல்வியில் முடிந்துவிடும் என்ற என்.கே.சிங், வரிவிதிப்பில் கவனமில்லாமல் விளையாட்டுத்தனமாக மாற்றியமைப்பது பெரும் சிக்கலில் கொண்டு சென்றுவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

15ஆவது நிதிக்குழுத் தலைவராகச் செயல்பட்டுவரும் என்.கே. சிங், உலக வங்கி, சர்வதேச நிதியம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உயர் நிறுவனங்களில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வாய்ப்பில்ல ராஜா' - ரெங்கராஜன்

ABOUT THE AUTHOR

...view details