சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்களது நாட்டிற்கு தெரியாமல் ரகசியமாகக் கருப்புப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைப்பது வழக்கம். இப்படி தனது வங்கியில் பணம் வைத்திருக்கும் நாடுகளின் விவரங்கள் மற்றும் அதன் மதிப்பையும் ஸ்விஸ் அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா கடந்த ஆண்டைவிட ஒரு இடம் முன்னேறியுள்ளது. 2018ஆம் ஆண்டு 73ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது 74ஆவது இடத்தில் உள்ளது. இது நல்ல முன்னேற்றமாகும்.
ஸ்விஸ் கருப்புப் பணம்: இந்தியாவின் இடம்?
ஸ்விஸ் வங்கியில் ரகசியமான முறையில் பணம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 74வது இடத்தில் உள்ளது.
swiss
ஸ்விஸ் வங்கியில் அதிகபட்ச பணம் வைத்திருக்கும் நாடுகளில் முதலிடத்தை பிரிட்டன் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் அமெரிக்கா, மூன்றாவது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள், நான்காவது இடத்தில் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.