தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஜிஎஸ்டி மூலம் வரிகள் குறைக்கப்பட்டதன் விளைவாக, வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! - tamil business news

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் ஒன்றாம் ஆண்டு நினைவு தினத்தில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'சரக்கு மற்றும் சேவை வரி வருவதற்கு முன் மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்), கலால், விற்பனை வரி என்று மக்கள் 31 விழுக்காடு வரை வரி செலுத்தி வந்தனர். ஜிஎஸ்டி மூலம் அது குறைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம்
மத்திய நிதி அமைச்சகம்

By

Published : Aug 24, 2020, 2:22 PM IST

டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி மூலம் வரிகள் குறைக்கப்பட்டதை அடுத்து, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.24 கோடி என்றளவில் இருமடங்காக உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் ஒன்றாம் ஆண்டு நினைவு தினத்தில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'சரக்கு மற்றும் சேவை வரி வருவதற்கு முன் மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்), கலால், விற்பனை வரி என்று மக்கள் 31 விழுக்காடு வரை வரி செலுத்தி வந்தனர். ஜிஎஸ்டி மூலம் அது குறைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரூ.1.5 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனங்கள், ஒருங்கிணைந்த திட்டத்தை பயன்படுத்தி, ஒரு விழுக்காடு வரி மட்டும் செலுத்தலாம். ஜிஎஸ்டிஅமலுக்கு வந்த உடன் பெரும் எண்ணிக்கையிலான பொருட்கள் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டது. தற்போது ஆடம்பரப் பொருள்களுக்கு மட்டுமே 28 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது.

மொத்தம் 230 பொருட்கள் மீது 28 விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 200 மீது வரி குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி துறைக்கு குறிப்பிடத்தகுந்த நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது, அவை 5 விழுக்காடு வரியின் கீழ் உள்ளது. மிகக்குறைந்த விலையிலான வீடுகள் மீதான ஜிஎஸ்டிஒரு விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் சுமார் 65 லட்சம் பேர் வரி செலுத்திய நிலையில், தற்போது 1.24 கோடி பேர் வரி செலுத்தி வருகின்றனர். ஜிஎஸ்டியில் உள்ள அனைத்து நடைமுறைகளும் முழுமையாகத் தானியங்கு மயமாக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 50 கோடி ஜிஎஸ்டிதாக்கல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு 131 கோடி இ-வே பில் உருவாக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details