சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக அரசுத் தலைமை தணிக்கையாளர் ராஜிவ் மகரிஷி சார்பில் அறிக்கையானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மத்திய அரசு ஜி.எஸ்.டி வரிகளைச் சரியான முறையில் அமல்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்பான படிவங்கள் முறையாகத் தாக்கல் செய்யப்படுவதில்லை எனவும், மாதம்தோறும் இந்த படிவங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநில அரசுகளுக்கான வருவாய் பகிர்விலும் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கான வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.