டெல்லி: நீண்ட ஊரடங்கின் மூலமாக அரசிற்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பல முயற்சிகளை மத்திய அரசு எடுத்துவரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களூக்கான அகவிலைப்படி உயர்வை 2021ஆம் ஆண்டுவரை நிறுத்திவைப்பதாக நிதி அமைச்சகம் தெளிவுபட அறிவித்துள்ளது.
செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதி திரட்டும் முனைப்பில் அரசு! - Covid-19 fight
சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வை 2021 ஜூலைவரை நிறுத்திவைப்பதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமைச்சரவை செலவினங்கள், துறை ரீதியிலான முக்கிய செலவினங்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்படுகிறது. இந்தச் செலவினங்களில் ஊதியம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படும். மேலும், அவசியமற்ற செலவினங்களை அரசு கட்டுப்படுத்தியுள்ளது.
வழக்கமான சம்பளம், குழந்தைகள் கல்விக்கான சலுகைகள் ஆகியவற்றிற்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பள நிலுவைத் தொகை, எல்.டி.சி., விடுப்பு நிலுவைத் தொகை போன்ற பிற சலுகைகளை ஜூன் 30ஆம் தேதிவரை மத்திய அரசின் முன் அனுமதியின்றி செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.