தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சீனாவிற்கு அடுத்த செக்: செப்., 1 முதல் பொம்மைகளுக்கும் தர பரிசோதனை! - business news in tamil

சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் இந்திய தர நிர்ணய ஆணைய விதித்துள்ள தரக்கட்டுபாடுகளுக்கு உட்பட்டால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்தப் புதிய நடைமுறை செப்டம்பர் 1 ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

பொம்மைகளுக்கு தரபரிசோதனை
பொம்மைகளுக்கு தரபரிசோதனை

By

Published : Aug 22, 2020, 7:28 PM IST

டெல்லி: இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் செப்டம்பர் 1 முதல் உரிய பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளை பரிசோதிக்க இந்திய தர நிர்ணய ஆணைய (பிஐஎஸ்) அலுவலர்கள் ஏழு இந்திய துறைமுகங்களில் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஐஎஸ் தர நிர்ணய அலுவலர்களால் பொம்மை மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் இந்திய ஏற்றுமதி

வர்த்தக அமைச்சகத்தால் வழங்கப்பட்ட பொம்மைகள் தரக் கட்டுப்பாடு ஆணை 2020, உள்நாட்டு, வெளிநாட்டு பொம்மை உற்பத்தியாளர்களுக்கு பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. பிஐஎஸ்ஸின் பிரமோத் திவாரி கூறுகையில், “நாட்டில் சுமார் 268 கட்டாய தர நிலைகள் உள்ளன. முக்கிய துறைமுகங்களில் உள்ள பிஐஎஸ் ஊழியர்கள் மாதிரிகள் எடுத்து துறைமுகத்திலேயே தயாரிப்புகளை சோதிப்பார்கள்.” என்றார்.

மீண்டும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொதுத்துறை வங்கிகள்!

இந்தத் தரப் பரிசோதனை இரண்டு நிலைகளில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் இந்த முறையானது வரும் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து பெரும்பாலும் பொம்மைகள் இறக்குமதியாகும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details