டெல்லி: சரக்கு ரயில்வே வழித்தட கட்டுமானத்தில் தனியார் துறையை அனுமதிக்க மத்திய ரயில்வேத் துறை முடிவெடுத்துள்ளது.
தனியார் வசம் செல்லும் சரக்கு ரயில் பாதை! - Build-Operate-Transfer model Dedicated Freight Corridor
சரக்கு வழித்தடங்கள் (டி.எஃப்.சி) கட்டுமானத்தில் பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் மாதிரியை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக தனியார் துறைக்கு ரயில்வே இந்த கட்டுமான வேலைகளுக்கு அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொது மற்றும் தனியார் துறையின் கூட்டு திட்டத்தின் கீழ் 538 கி.மீ நீளமுள்ள பீகார் - மேற்கு வங்கம் இடையேயான சரக்கு ரயில்பாதை கட்டமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு 15,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆல்ஸ்டன், உலக வங்கி, டாடா திட்டங்கள், எல் அண்ட் டி உடன் பல தனியார் நிறுவனங்கள் இதில் இணைய தங்கள் விருப்பத்தினை அரசிடம் தெரிவித்துள்ளது.
இந்த நீட்டிப்பில் வடிவமைப்பு, கட்டடம், நிதி, பராமரிப்பு மற்றும் பரிமாற்ற மாதிரி போன்றவற்றை பரிசோதனை செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.