கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பல துறைகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.
கரோனாவால் சுருங்கிய இந்திய வர்த்தகம்!
டெல்லி: கரோனாவால் பெட்ரோலியம், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் ஏற்றுமதி, இறக்குமதியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பெட்ரோலியம், ஜவுளி, ரத்தினங்கள் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 36.47 விழுக்காடு குறைந்து 19.05 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
அதேபோல், இறக்குமதியும் 51 விழுக்காடு சரிந்து 22.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் இரண்டு மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை 9.91 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. எண்ணெய் இறக்குமதியானது மே மாதத்தில் 3.49 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இதே மாதத்தில் 12.44 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 71.98 விழுக்காடு குறைவு ஏற்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதியும் 98.4 விழுக்காடு குறைந்து 76.31 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.