பித்தோராகர் (உத்தரகாண்ட்): சாலைகள் மூடப்பட்ட நிலையில், இமயமலை கிராமங்களில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து மிக மோசமான நிலை உருவாகியுள்ளது.
இந்திய-சீன எல்லையில், பித்தோராகர் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள இமயமலை கிராமங்களில்தான் இந்த நிலைமை. கட்டுக்கடங்காத விலையேற்றத்தினால் மக்கள் திகைத்து நிற்கின்றனர்.
இந்தப் பகுதிகளை இணைக்கும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. பர்ஃபு, லாஸ்பா, ரலாம், லில்லம் உள்ளிட்ட உயர் இமயமலை பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் எட்டு மடங்கு வரை விலைவாசி உயர்ந்துள்ளது. இந்தக் கிராமங்களில் கிலோ ரூ.20-க்கு விற்கபட்ட உப்பின் விலை தற்போது ரூ.130 வரை விற்கப்படுகிறது.
சர்க்கரை, மாவு ஒரு கிலோ ரூ.150-க்கும், கடுகு எண்ணெய் லிட்டர் ரூ.275 முதல் ரூ.300-க்கும் விற்கப்படுகிறது. மல்கா பருப்பு கிலோ 200 ரூபாய்க்கும், அரிசி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெங்காயம் கிலோ 125 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இதையும் படிங்க:செப்டம்பரில் 23% உயர்வு கண்ட ஜி.எஸ்.டி வசூல்