டெல்லி: தலைநகரில் டீசலின் விலை ரூ.8.38 காசுகள் குறைந்து 73.56 ரூபாயாக விற்பனை செய்யபடுகிறது. அனைத்து நகரங்களிலும் உடனடியாக இந்த விலைகுறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோலை விட அதிகமாக இருந்த டீசலில் விலையானது, ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் அரசு 30 விழுக்காடாக இருந்த மதிப்புக் கூட்டு வரியை 16.75 விழுக்காடாக குறைத்துக் கொண்டதன் விளைவாக இந்த விலை இறக்கம் நிகழ்ந்துள்ளது.
ஜூன் மாதம் தொடர்சியாக 18 நாள்களுக்கு எரிபொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. டீசல் விலை லிட்டருக்கு ரூ 10.48 ஆகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8.50 ஆகவும் அதிகரித்தது.
விதைகளால் ஆன ராக்கிக்கு படு கிராக்கி!
“டெல்லியின் பொருளாதாரத்தை உயர்த்துவது கடுமையான சவாலாக உள்ளது. ஆனால் மக்களின் ஒத்துழைப்புடன் சவால்களை முறியடிப்போம். டீசல் விலை இப்போது லிட்டருக்கு 82 ரூபாயிலிருந்து 73.64 ரூபாயாகக் குறையும். டெல்லி நகரத்திலுள்ள வர்த்தகர்களும், தொழிலதிபர்களும் இந்த விலை குறைப்பை கோரியிருந்தனர்” என்று முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.