தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

‘தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும்' - பட்ஜெட்

சென்னை: தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இரண்டு தவணைகளாக விரைவில் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

minister
minister

By

Published : Feb 8, 2020, 8:37 PM IST

நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”எல்ஐசியின் பங்குகள் பொதுமக்களுக்குத்தான் விற்பனை செய்யப்படுகிறது. நீங்களும், நானும்தான் வாங்கப்போகிறோம். எத்தனை சதவிகித பங்குகள் விற்பனை செய்வது என இன்னும் முடிவு செய்யவில்லை. இதனால் எல்ஐசியில் நிர்வாக சீர்திருத்தம் பெறும், வெளிப்படைத்தன்மை மேலும் அதிகரிக்கும். நாட்டின் மிகப் பெரிய நிறுவனத்தில் பொதுமக்களும் பங்கு வகிக்கும்போது, அது மக்களுக்கும், அந்நிறுவனத்திற்கும் நன்மை அளிக்கும்.

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை பொறுத்தவரை, தமிழ்நாடு தனிமைப்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளது. தமிழகத்திற்கான நிலுவைத் தொகை இரண்டு தவணைகளாக விரைவில் வழங்கப்படும்.

விவசாயத்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறுவதை ஏற்க முடியாது

மாநிலங்களுக்கான நிதியை 14 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கொடுத்துள்ளோம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசம் ஆனதால் 1 சதவிகிதம் மட்டும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. வரி வசூல் குறைந்துள்ளதால் மாநில அரசுக்கு வழங்கப்படும் நிதியும் குறையும்.

மக்கள் கையில் அதிகப் பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் வருமான வரியைக் குறைத்துள்ளோம். இதனால் மிஞ்சும் பணத்தை வைத்து மக்கள் வீடு வாங்குகிறார்களோ, வண்டி வாங்குகிறார்களோ, சேமிப்பு செய்கிறார்களோ அது அவர்களது முடிவு. தனி மனிதனின் வருமானத்தை என்ன செய்ய வேண்டும் என அரசு வழிநடத்த தேவையில்லை ” என்று கூறினார்.

'தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும்'

மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சின் முக்கிய அம்சங்கள்:

  • மாநிலங்கள் ஒத்துழைத்தால் பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும்.
  • விவசாயத்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறுவதை ஏற்க முடியாது.
  • ஊரகப் பகுதி மக்கள் கையில் அதிக பணம் கொடுக்கும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • சந்தையில் தேவையை அதிகரிக்கப் போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • மாநில அரசோடு ஆலோசித்துதான் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து அறிவித்தோம்.
  • கீழடியில் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் அமைக்க மாநில அரசு முயற்சித்து வருகிறது.
  • பட்ஜெட் உரையின்போது சரஸ்வது சிந்து நாகரீகம் என்று கூறியது தொடர்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிப்பேன்.

இதையும் படிங்க: இறக்குமதி வரி உயர்வு எதற்கு? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details