மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஊரடங்கு உத்தரவையடுத்து வங்கிகள் இயக்கம் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், 'அனைத்து வங்கிகளும் தங்கள் வங்கிக் கிளைகளை திறந்து வைத்து, ஏடிஎம்களில் பணம் நிரப்பி பணியில் ஈடுபடுவதை உறுதி செய்துள்ளன. வங்கி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சமூக இடைவேளை பின்பற்றுதல் மதிக்கப்படுகிறது. தேவையான இடங்களில் சேனிடைசர்கள் வழங்கப்படுகின்றன. அவசர தேவைக்கோ, உதவிக்கோ @DFSFightsCorona-வை தொடர்புகொள்ளுங்கள்' என தெரிவித்திருந்தார்.