தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 12, 2020, 8:44 PM IST

ETV Bharat / business

இந்தியா 5% ஜி.டி.பி. வளர்ச்சியை பெற்றாலே பெரும் சாதனை: ருசிர் சர்மா

தற்போதைய சர்வதேச சூழலில் இந்தியா 5 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி பெற்றாலே பெரும் சாதனைதான் என பொருளாதார நிபுணர் ருசிர் சர்மா தெரிவித்துள்ளார்.

Ruchir Sharma
Ruchir Sharma

பிக்கி(Federation of Indian Chambers of Commerce & Industry) அமைப்பின் ஆண்டு விழா கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், மார்கன் ஸ்டான்லி அமைப்பைச் சேர்ந்த மூத்த பொருளாதார நிபுணர் ருசிர் சர்மா பங்கேற்று உரையாற்றினார்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து அவர் பேசுகையில், உலகம் தற்போது உலகமயமாக்கல் பொருளாதார சிந்தனையிலிருந்து வெளியேறிவருகிறது. எனவே, கடந்த ஆண்டுகள்போல ஏற்றுமதி 20 விழுக்காடு உயர்வை சந்திப்பது தற்போது சாத்தியமல்ல. எனவே, தற்போதைய சர்வதேச சூழிலல் இந்தியா 5 விழுக்காடு உயர்வை எட்டுவதே பெரிய சாதனையாகும்.

2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் 100 நாடுகள் 7 விழுக்காடு வளர்ச்சியை கண்டன. 2010க்கு பின் இந்த எண்ணிக்கை 100இல் இருந்து 10ஆக குறைந்தது. தெற்காசிய பிராந்தியத்தில் வர்த்தக உறவுகள் மிக குறைவாகவே உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் விவசாய, தொழில் சீர்திருத்தங்களை அரசு அவசர கதியில் கொண்டுவந்தது முறையல்ல என்றார்.

இதையும் படிங்க:போலி ஜி.எஸ்.டி. முறைகேடு: 2 மாதங்களில் 1.63 லட்சம் எண்கள் நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details