கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பொழுது போக்கிற்காக பெரும்பாலானோர் தொலைக்காட்சி மற்றும் இணையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தச்சூழ்நிலையில், வருகின்ற மார்ச் 31ஆம் தேதி வரை இந்தியாவில் யூடியூப் வீடியோ தரத்தை குறைப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோன்று கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் யூடியூப் வீடியோவின் தரம் குறைக்கப்பட்டது. வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் யூடியூப் பயன்படுத்தும் போது ஏற்படும் சிக்கலை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.