கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளே மியூசிக் செயலியை தான் வாடிக்கையாளர்கள் நீண்ட காலங்களாக உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில், கூகுளின் யூடியூப் மியூசிக் செயலிக்கு பயனாளர்கள் அனைவரையும் மாற்றுவதற்கான முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, பயனாளர்கள் பல காலங்களாக சேமித்து வைத்துள்ள மியூசிக் டேட்டாவை எளிதாக மாற்றுவதற்கான வழியை அறிவித்துள்ளது.
இதுகுறித்து யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "யூடியூப் மியூசிக் செயலியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பயனாளர்களுக்குப் பிடித்த பாடல்களுக்கான பிளே லிஸ்ட் நீளத்தையும் 1,000 முதல் 5,000 பாடல்களாக உயர்த்தியுள்ளனர். பயனாளர்கள் அனைவரும் கூகுள் பிளே மியூசிக் டேட்டாவை புதிய செயலிக்கு மாற்றுவதற்கு பேக்அப் எடுக்க வேண்டும்.
அப்படி செய்வதின் மூலம், புதிய யூடியூப் மியூசிக் செயலியில் பழைய பாடல்களை கேட்க முடியும். தேவைப்பட்டாலும் யூடியூப் மியூசிக் செயலி நூலகத்தில் உள்ள லட்சத்திற்கும் அதிகமான பாடல்களில், தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.