2004-ல் தொடங்கப்பட்ட யெஸ் வங்கி 2005ஆம் ஆண்டிலிருந்து ஒரு காலாண்டில் கூட நஷ்டக் கணக்குக் காட்டியது இல்லை. ஆனால் இந்த முறை மார்ச் 2019-ல் 1,506 கோடி ரூபாயை நிகர நஷ்டமாகக் கணக்குக் காட்டி இருக்கிறது. இதற்கு காரணம் வாராக் கடன்கள்தானாம்.
காலாண்டு முடிவுகள்: லாபத்தை இழந்த யெஸ் வங்கி! - காலாண்டு முடிவுகள்
மும்பை: வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அளித்ததால் யெஸ் வங்கி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மார்ச் 2019இல் மட்டும் சுமார் 3,660 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள், வாராக் கடன்களாகத் தேங்கி நிற்கிறதாம். கடந்த மார்ச் 2018இல் இந்த வாராக் கடன்களின் அளவு வெறும் 399 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு பெரிய நிறுவனங்களுக்குக் கொடுத்த 1000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள், ஐஎல்&எஃப்எஸ் (IL&FS) நிறுவனத்துக்குக் கொடுத்த கடன்கள், சில சிறப்பு முதலீட்டு நிறுவனங்களுக்குக் கொடுத்த கடன்கள், வாராக் கடன்களாக மாறியதால் தான் இந்த நிலை எனவும் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு வங்கிக்கும் கடன் கொடுத்த பணத்துக்குக் கிடைக்கும் வருவாய், முதலீடு செய்திருக்கும் பணத்திலிருந்து கிடைக்கும் வருவாய், வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணங்கள் எனப் பல வழிகளிலிருந்து வருவாய் வரும். இதில் வங்கி கொடுத்த கடனுக்கு வரும் வருவாயும், முதலீடுகளுக்குக் கிடைக்கும் வருமானமும் தான் முக்கியம். மற்றவைகள் மூலம் வருவது எல்லாமே உபரி வருமானம் தான். அப்படி கடந்த ஜனவரி 2019 - மார்ச் 2019 வரையான 3 மாதத்தில் வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த கட்டணங்களை வசூலிக்கவில்லை யெஸ் வங்கி. அதனால் மட்டும் 890 கோடி கூடுதல் இழப்பைச் சந்தித்துள்ளது யெஸ் வங்கி.