தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தொடர்ந்து சீனாவில் தொழில் செய்ய விரும்பாத பெருநிறுவனங்கள் - வெளியேறிய யாஹூ - தனியுரிமை தகவல்கள்

சீனாவின் புதிய இணையதள கொள்கைகள் பெரு நிறுவனங்களுக்கு அதிகளவு நெருக்கடியை கொடுத்துள்ளது. இதனால் தொடர்ச்சியாக சீனாவை விட்டு பல நிறுவனங்கள்வெளியேறி வரும் சூழலில், யாஹூ நிறுவனமும் அந்த முடிவை எடுத்துள்ளது.

Yahoo pulls out of China, Yahoo, Personal Information Protection Law, Internet censorship, யாஹூ, வெளியேறும் யாஹூ, சீனா, புதிய கொள்கைகள், தனியுரிமை தகவல்கள், ஹாங்காங்
வெளியேறிய யாஹூ

By

Published : Nov 3, 2021, 3:43 PM IST

ஹாங்காங்: அமெரிக்காவின் பழமையான இணையதள நிறுவனமான யாஹூ, சீனாவில் இருந்து தனது சேவைகளை நிறுத்திக்கொண்டு வெளியேறியுள்ளது.

தொழில் செய்வதற்கான சூழல் மற்றும் புதிய சட்டவிதிகளால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக நவம்பர் 1ஆம் தேதி முதல், சீனாவில் தங்களின் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக யாஹூ நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டிலேயே பெய்ஜிங் நகரில் உள்ள யாஹூ அலுவலகத்தின் செயல்பாடுகளை நிறுவனம் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. வெளிப்படையான இணையதள தேடல் நடைமுறையை சீனாவின் புதிய கொள்கைகள் தடுப்பதாக யாஹூ நிறுவனம் குற்றஞ்சாட்டுகிறது.

உலகை ஆட்டிப்படைத்து வரும் கரோனா, பல நாடுகளுடனான அரசியல் பதற்றங்கள், அண்டை நாடுகளிலும் தென் சீனக் கடலிலும் ஆக்கிரமிப்பு, அதிக கட்டண விகிதங்கள், இன பாகுபாடு, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை தவறாகப் பயன்படுத்துதல் என பல காரணங்கள், உலக நாடுகளின் தொழிற்சாலைகள் சீனாவில் இருந்து வெளியேறுவதற்கான காரணங்களாக உள்ளன.

ஹூவாய் நிறுவனம் சீனாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. இன்று உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு 5ஜி சம்பந்தமான பொருட்கள், ஸ்மார்ட்போன் உற்பத்தி என பல பொருட்களையும் உற்பத்தி செய்து வரும் நிறுவனம். இது சீனாவுக்கு ஆதரவாக உளவு பார்ப்பதாக அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. இதன் பின்னர் இந்த நிறுவனம் வணிக ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் ஆலைகள் மூடப்பட்ட அதே நேரத்தில், வியட்நாம் மற்றும் இந்தியாவில் புதிய ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன. அவைகள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு சுமார் 300 மில்லியன் தொலைபேசிகளை உற்பத்தி செய்கின்றன. அவற்றில் வியட்நாம் பாதிக்கும் மேலாகவும், நொய்டாவில் ஆண்டுக்கு 120 மில்லியன் போன்களை உற்பத்தி செய்யும் திறனும் கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சாம்சங் உற்பத்தி ஆலை உலகின் மிகப்பெரிய ஆலையாகவும் உள்ளது. இது சீனாவில் இருந்ததை காட்டிலும் பெரியது. இந்திய உற்பத்தி வரலாற்றில் இதுபோன்ற உற்பத்தி ஆலை, இந்தியாவுக்கு வந்துள்ளது மறக்க முடியாத ஒன்று. இது விரைவில் சாம்சங் ஃபோல்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் இருந்து வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர க்ளோசர் ஹோம், ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆப்பிளின் புதிய பயனாளிகள். ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து வெளியேறி, இந்தியாவில் பிஎல்ஐ திட்டத்தின் மூலம் இந்தியாவில் உற்பத்தியை தொடங்கி நடத்தி வருகிறது.

இதையும் படிங்க:விரைவில் சிறிய ரக மின்சார கனரக வாகனங்களை களமிறக்கும் டாடா

ABOUT THE AUTHOR

...view details