கைப்பேசி துறையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் சியோமி நிறுவனத்தின் புதிய படைப்பான எம்ஐ 10 செல்போன் இந்தியாவில் மே 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு முன்னதாக மார்ச் 31ஆம் தேதி வெளியிட தயாராகியிருந்த செல்போன் அறிமுகம், ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, இ-காமர்ஸ் விநியோகம் மெதுவாகத் தொடங்கியுள்ளதால், ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வான அறிவிப்பை சியோமி இந்தியா நிர்வாக இயக்குநர் மனு ஜெயின் (Manu Jain) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சியோமி எம்ஐ 10 முக்கிய அம்சங்கள்:
- 6.67 முழு எச்டி AMOLED டிஸ்பிளே
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி (Octa-core Qualcomm Snapdragon 865 processor)
- 4,780 mAh பேட்டரி மற்றும் 30W அதிவேக சார்ஜிங் வசதி
- நான்கு பின்புற கேமரா. அதில், முதல் கேமிரா 108 எம்.பியும் 1 / 1.33 இன்ச் சென்சார் உள்ளது. இரண்டாவது கேமரா 13 எம்பி அல்ட்ரா-வைட் கேமராவும் 123 டிகிரி எஃப்ஒவி (123-degree FOV) உள்ளது. மீதமுள்ள கேமராக்களில் 2MP மேக்ரோ சென்சார் , 2MP டெப்த் சென்சார் அடங்கும்.
- 8 ஜிபி ரேம்
- 20 எம்பி முன்புற கேமரா
இந்த எம்ஐ 10 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இனி ஸ்மார்ட் ஃபேன் உங்கள் கையில்.... ஜியோமியின் அடுத்த படைப்பு!