தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

விவோவின் அட்டக்காசமான மாடல் இந்தியாவில் அறிமுகம்! - VIVO company

இந்தியாவில் 'விவோ இசட் ஒன் ப்ரோ' எனும் புதிய ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

விவோ இசட்.ஒன் ப்ரோ

By

Published : Jul 13, 2019, 4:35 PM IST

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு மொபைல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் விவோ இசட் ஒன் ப்ரோ செல்போன் விற்பனைக்கு வந்து வாடிக்கையாளர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதனையடுத்து விவோ இசட்.ஒன் ப்ரோ செல்போனை வருகிற ஜூலை 16 இந்தியாவில் அறிமுகம் செய்யப் போவதாக விவோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செல்போன் பிளிப்கார்ட் தளத்திலும், விவோ ஷோரூம்களிலும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விவோ இசட் ஒன் ப்ரோ சிறப்பு அம்சங்கள்:

  • விவோ இசட்ஒன் ப்ரோ கைப்பேசி மூன்று வெவ்வெறு திறன் கொண்ட மாடல்களாக வெளியாக இருக்கிறது
  • இந்த செல்போன் மிரர் கருப்பு, சோனிக் கருப்பு, சோனிக் நீலம் என முன்று வண்ணங்களில் வருகிறது.
  • இதில் மூன்று பின்பற கேமராக்கள் கொண்டுள்ளதால் மிக துல்லியமான புகைப்படங்களை எடுக்க பயனுள்ளதாக இருக்கும்.
  • 128 ஜிபி கொண்டுள்ளதால் அதிகப் படியான புகைப்படங்கள்,விடியோக்கள் பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம்
  • 4 ஜி வோல்ட், வைஃபை(WIFI), புளூடூத் 5.0, ஜி.பி.எஸ்(GPS) / ஏ-ஜி.பி.எஸ், ஓ.டி.ஜி(OTG) , யூ.எஸ்.பி(USB) 2.0 என பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளன.
  • 5000mAH பேட்டிரி பேக்கப், 18W அதிவேக சார்ஜிங் வசதி உள்ளதால் பயண நேரங்களில் மிகவும் உபயோகமாக இருக்கும்.

ABOUT THE AUTHOR

...view details