சமூக வலைதள செயலியான டெலிகிராம் தங்களின் பிரதான குழு காணொலி அழைப்புகளுக்கான பதிப்பை, தயார் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பதிப்பு பயனர்களுக்கு ப்ளே ஸ்டோர் மூலமாக, இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டில் மக்கள் எவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பினார்களோ, அதேபோல தற்போது காணொலி அழைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாகத்தைப் போக்கும் வகையில் நிறைய செயலிகள் புழக்கத்தில் உள்ளன.
ஆனால், சில பயனர்களுக்கு எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும்; வேறு சில அதிகப்படியான பாதுகாப்பினை அளிக்கவல்லதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இவ்வேளையில் டெலிகிராம் நிறுவனம் இவ்விரண்டு பரிமாணங்களையும் கருத்திற்கொண்டு, தனது செயலியை வடிவமைத்து வருவதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.