பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் சேவை அளித்து வருகிறது ஸ்பைஸ் ஜெட்டின் போயிங் 737 விமான ரகங்கள். இந்நிலையில், நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்டு, மாலை 4.30 மணிக்கு சீரடியில் தரையிறங்கிய இந்த ரக பயணிகள் விமானம் ஒன்று, ஓடு பாதையிலிருந்து 50 மீ விலகித் தரையிறக்கப்பட்டது.
ஓடுபாதையிலிருந்து விலகிய விமானம், விமானிகளுக்குத் தடை! - veers off runway on landing
விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதால் இரு விமானிகளை பணியிடை நீக்கம் செய்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். விமான நிலைய அலுவலர்கள் விரைந்து சென்று, பயணிகள் அனைவரையும் வெளியேற்றினர். இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓடுபாதையிலிருந்து விமானம் விலகிச் சென்றதில் ஏதேனும் சதி வேலைகள் உள்ளதா என்பதைக் குறித்து விசாரித்ததில், விமானிகளின் கவனக்குறைவே காரணம் என்று தெரியவந்தது. இதனையடுத்து விமானத்தை இயக்கிய விமானிகளை பணியிடை நீக்கம் செய்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், இதுதொடர்பான அடுத்தக்கட்ட விசாரணைக்கு விமான விபத்து விசாரணை ஆணையத்தை அணுகியுள்ளது.