சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து தனது வியாபாரத்தைச் சில்லறை சந்தையில் விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து 5.7 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது.
அதன்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் கிளைகள் சில இடங்களில் மட்டுமே உள்ளது. அதை விரிவாக்கம் செய்து, உலக முழுவதும் உள்ள மக்களைச் சென்றடையும் வகையில், ஜியோ மார்ட்டை வாட்ஸ்அப்பில் லைவ்வாக கொண்டு வந்துள்ளனர். இச்சேவையை அடைவதற்கு வாடிக்கையாளர்கள், ஜியோமார்டின் 88500 08000 என்ற வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஜியோமார்ட் சார்பாக வாடிக்கையாளர்களுக்கு வரும் லிங்கானது, வாட்ஸ்அப் சாட் டிஸ்பிளேவில் வந்து நிற்கும்.
இந்த லிங்க்கின் கால நேரம் 30 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். வாடிக்கையாளர்கள் லிங்க்கை கிளிக் செய்தவுடன் புதிய பக்கத்திற்குத் திருப்பி அனுப்பப்படுவர். அதில், பயனாளர்கள் தனது முகவரி, தொலைபேசி எண்ணை நிரப்ப வேண்டும்.