கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை இந்தியர்களின் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் மூன்று புதிய டிவி மாடல்களை நேற்று (ஜூலை இரண்டு) வெளியிட்டுள்ளது. அதன்படி 55 இன்ச் கொண்ட ஒன்பிளஸ் டிவி U சீரிஸ், 32, 43 இன்ச் கொண்ட ஒன்பிளஸ் டிவி Y ஆகிய டிவி மாடல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்பிளஸ் Y சீரிஸ் சிறப்பம்சங்கள்
- 32/43 இன்ச் எல்இடி டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம்
- 93% colour gamut on DCI-P3
- 20W ஸ்பீக்கர்கள்
- டால்பி அட்மாஸ் வசதி
விலை
- 32 இன்ச் டிவி - 12,999 ரூபாய்
- 42 இன்ச் டிவி - 22,999 ரூபாய்
ஒன்பிளஸ் U சீரிஸ் சிறப்பம்சங்கள்
- 55 இன்ச் எல்இடி டிஸ்பிளே
- Ultra HD (4K) வசதி
- ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம்
- 93% colour gamut on DCI-P3
- 30W நான்கு ஸ்பீக்கர்கள்
- டால்பி அட்மாஸ் வசதி