பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின் நாட்டில் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை அதிகரிக்கத் தொடங்கியது. அதன்பின்னர் வாடிக்கையாளர்கள் மத்தியில் பே டிஎம், கூகுள் பே, ஃபோன் பே போன்ற செயலிகள் அதிகளவில் பிரபலமடையத் தொடங்கியது. இதில் ஃபோன் பே நேஷனல் பேமன்ட் கார்ப்பரேஷான் ஆஃப் இந்தியாவால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை செயலியாகும்.
'ஃபோன் பே' செயலிக்கு இந்தியாவில் கூடும் மவுசு
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலியான 'போன் பே' செயலியை இந்தியாவில் இதுவரை சுமார் பத்து கோடி பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.
PP
இந்நிலையில், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இச்செயலி பெருமளவில் சென்றடைந்துள்ளதாக ஜூலியா சான் என்ற செல்பேசி ஆய்வாளர் வெளியிட்டுள்ள ஆய்வு தகவில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கூகுள் பே எனப்படும் டெஸ் செயலிக்கு அடுத்தபடியாக இந்திய வாடிக்கையாளர்கள் ஃபோன் பே செயலியை அதிகளவில் தரவிறக்கம் செய்துள்ளதாகவும், தற்போது சுமார் 10 கோடி பயனாளர்களை ஃபோன் பே செயலி சென்றடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஜூலியா சான்.