தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கழிவறை வசதியுடன் ஓலா கார்கள்? - ஓலா

ஓலாவின் வாடகை கார்கள் கழிவறை வசதியுடன் வரவுள்ளதாக அந்நிறுவனம் விளம்பரம் செய்து வருகிறது. ஆனால் இது அந்நிறுவனம் ஏப்ரல் 1 ஆம் தேதி வழக்கமாக செய்யும் 'பிராங்க்' என பலரும் கூறி வருகின்றனர்.

கழிவறை வசதியுடன் ஓலா கார்கள்?

By

Published : Mar 31, 2019, 1:20 PM IST

பிரபல வாடகை கார் நிறுவனமான ஓலா பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி தங்களது வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. காரில் தொடங்கி இந்த நிறுவனத்தின் பயணம் ஆட்டோ, பைக் டாக்சி என விரிவடைந்துகொண்டே செல்கிறது. தற்போது புதிய வசதியுடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மக்கள் பலரும் பொது இடங்களில் சிறுநீர் கழிக்க சிரமப்படுவதை மனதில் வைத்து கழிவரை வசதியுடன் கூடிய புதிய வாடகை கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக விளம்பரம் செய்து வருகிறது. ஆனால், இதனைப் பலரும் நம்பத் தயாராக இல்லை. காரணம் ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு புதிய திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது ஓலா நிறுவனம்.

ஓலா சேவையில் கழிவறை
கடந்த 2015ஆம் ஆண்டில் ஓலா விமான சேவையை தொடங்கப்போவதாகவும், 2016-ல் ஓலா ரூம், 2017-ல் ஓலா வீல்ஸ் என தொடர்ந்து ஏமாற்றி வாடிக்கையாளர்களை பிராங்க் செய்து வருகிறது. கடந்தாண்டு, ஓலா செய்திக் குழுமம் தொடங்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டு தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. இதனால், இந்த டாய்லெட் கார் சேவையும் இதேபோன்றதுதான் என பலரும் கருதுகின்றனர். நாட்டில் பல இடங்களில் போதிய கழிவறை வசதிகள் இல்லை. அப்படியே இருந்தாலும் அது பயன்படுத்தும் நிலையில் இல்லை. இதனால் பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக பெண்கள் சிரமப்படுகிற சூழல் நிலவுகிறது. ஒருவேளையில் அறிவிக்கப்பட்டதைப் போல ஓலா கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் இது பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பலாம்.

ABOUT THE AUTHOR

...view details