தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'இனி சிரிச்சுக்கிட்டே இருக்கலாம்' - நெட்பிளிக்ஸில் புதிய வசதி

டெல்லி: முன்னணி ஆன்லைன் வீடியோ தளமான நெட்பிளிக்ஸ், நகைச்சுவை வீடியோக்களை, மொபைல் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழ, புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

netflix
நெட்பிளிக்ஸ்

By

Published : Mar 5, 2021, 12:56 PM IST

முன்னணி ஆன்லைன் வீடியோ தளமான நெட்பிளிக்ஸ், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நெட்பிளிக்ஸ் மொபைல் பயனாளர்கள், நகைச்சுவை வீடியோக்களை பார்த்து மகிழ ஃபாஸ்ட் லாஃப்ஸ் (Fast Laughs) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செயலிகளுக்குப் போட்டியாகக் இந்த வசதி களமிறக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை வீடியோக்களை பார்க்க நெட்பிளிக்ஸில் புதிய வசதி

இதன் மூலம், க்ரைம், திரில்லர் திரைப்படங்கள், ஹாரர் வெப் தொடர்கள் (பிக் மவுத்), கெவின் ஹார்ட், அலி வோங் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களின் முழு நிகழ்ச்சிகளையும் வாடிக்கையாளர்கள் பார்த்து மகிழலாம். மேலும், பயனாளர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளின் லிங்க்கை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்நேப்சாட், ட்விட்டர் போன்ற செயலிகளில் பகிரும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இது விரைவில் ஆண்ட்ராய்டு செயலிகளில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:பீஸ்ட் இஸ் பேக்... சந்தையை தெறிக்கவிட்ட ரெட்மி நோட் 10 சீரிஸ்!

ABOUT THE AUTHOR

...view details