தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த வணிக ரீதியிலான இயக்கங்ளைld தொடங்க வேண்டும்! - சிஐஐ கணக்கெடுப்பு

வணிக ரீதியிலான வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த, கோவிட்-19 நோய்த் தொற்று அதிகம் பாதிக்காத பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு இருக்கும் தொழில்களின் இயக்கங்களைத் தொடங்க அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்றும் அருகில் இருக்கும் தொழிலாளர்களைக் கொண்டே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

CII report
CII report

By

Published : Apr 26, 2020, 11:43 PM IST

Updated : Apr 27, 2020, 12:36 PM IST

டெல்லி: சங்கிலித் தொடர் நிறுவனங்கள், அதற்கான அனுமதி, அதன் தொழிலாளர்களுக்கான அனுமதி ஆகியவை தொழில்துறையை மீட்டுருவாக்கம் செய்ய உதவும் என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சிஐஐ ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) 180 நிறுவனங்களில் நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகள் குறித்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இதனை அறிவுறுத்தியுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகம் பாதிக்காத பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு இருக்கும் தொழில்களின் இயக்கங்களைத் தொடங்க அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்றும் அருகில் இருக்கும் தொழிலாளர்களைக் கொண்டே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு பரிதாபங்கள்: வணிகம், அரசு, நிதி கொடையாளர்கள் முடக்கம் - சுபாஷ் சந்திரா

இது தற்கால வீழ்ச்சியை சிறிதளவு குறைக்க உதவும் என்று சிஐஐ கூறியுள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி, இதற்கு இசைவு தெரிவித்த சிறு குறு நிறுவனங்கள், மாநில அரசின் உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், தங்கள் நிறுவனத்தை இயக்க விருப்பம் தெரிவித்தவர்களுக்கு, மாநில அரசுகள் சரியான பதிலைக் கூறாததால் 46% நிறுவனங்கள் இன்னும் செயல்பாட்டு நிலைக்கு வராமல் உள்ளது என்றும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 27, 2020, 12:36 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details