தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நிதிமுறைகேடு விவகாரம்: இண்டிகோ நிர்வாகம் பதிலளிக்க மத்திய அரசு ஆணை - விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம்

டெல்லி: இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட குழப்பம் குறித்து நிர்வாகம் விளக்கமளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

IndiGo

By

Published : Jul 17, 2019, 3:15 PM IST

நாட்டின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் புது சர்ச்சை அண்மையில் வெடித்தது. அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும், சக பங்குதாரரான ராகேஷ் கங்க்வால், இண்டிகோ நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் நிதிநிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

இண்டிகோ நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான ராகுல் பட்டியாவுக்கும், ராகேஷ் கங்க்வாலுக்கும் இடையே நிறுவனத்தின் நிதி நிர்வாகம் குறித்து கருத்து முரண்பாடு ஏற்பட்டு அதன் வெளிப்பாடாகவே இந்த பிரச்னை தற்போது வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்பிரச்னையில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தலையிட்டுள்ளது. நிறுவனத்தின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்விவகாரம் குறித்து விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் விமான போக்குவரத்து நிறுவனங்கள் சில ஆண்டுகளாகவே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தொடங்கி, ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகியவை நிர்வாகம் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கி பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details