இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், சிறிய கடைகள், சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை இணையத்தில் விற்க உதவும் ஒரு திட்டமான ‘அமேசானில் உள்ளூர் கடைகள்’ தொடங்கப்படுவதன் மூலம் அனைத்து பொருட்களையும் உடனடியாக பயனர்களுக்கு சென்றடையும்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அமேசான் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ-மார்ட், வாட்ஸ்-ஆப் இணைந்து சிறு கடைகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கு இடையில் நிகழும் பணப் பரிவர்த்தனைக்கு புதிய ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்ததையடுத்து, அமேசான் இந்த முயற்சியில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.