ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கனவே ஊழியர்களின் சம்பளப் பிரச்னையில் சிக்கித் தவித்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்திற்கும் பைலட்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து பைலட்கள் வேலை நிறுத்தத்தை வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
முதலில் சம்பளம், அடுத்து தான் வேலை: தலைதூக்கும் ஜெட் ஏர்வேஸ் விவகாரம்!
டெல்லி: இந்தியாவில் விமான நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வரும் நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.
jet airways salary issue
ஆனால் தற்போது அதிலும் சமரசம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும், விமானத்தை இயக்க மாட்டோம் என்றும் ஊழியர்கள் மீண்டும் கூறியிருப்பது நிறுவனத் தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.