தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஐசிஐசிஐ இணைய வங்கி சேவை பாதிப்பு

ஐசிஐசிஐ வங்கியின் இணைய சேவையை அணுகுவதில் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர்.

ICICI Bank
ICICI Bank

By

Published : Jun 4, 2020, 3:06 PM IST

இந்தியாவில் நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது.

நாடு முழுவதுமுள்ள வங்கிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் முடிந்தவரை வங்கிக்கு நேரில் வருவதை தவிர்த்து இணைய சேவையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றவர்களுக்கு பணம் அனுப்புவது, கடனை திருப்பிச் செலுத்துவது உள்ளிட்டவற்றுக்கு இணைய சேவையையே பெரிதும் நம்பியுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை முதலே ஐசிஐசிஐ வங்கியின் இணைய சேவையை அணுகுவதில் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர். இது மாதத்தின் முதல் வாரம் என்பதால், கட்டணங்களைச் செலுத்துவது உள்ளிட்டவற்றுக்கு இணைய சேவையை பயன்படுத்த முடியாமல் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுவருகின்றனர்.

இது குறித்து ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் பலரும் ட்விட்டரில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர்

இதையும் படிங்க: 11 இலக்க அலைபேசி எண்களுக்கு வாய்ப்பில்லை: டிராய்

ABOUT THE AUTHOR

...view details