பிரபல டெக் நிறுவனமான ஹெச்.சி.எல்.இலங்கை தலைநகர் கொழும்புவில் தன்னுடைய கிளையை நிறுவியுள்ளது. நிறுவிய 18 மாதங்களுக்குள், உள்ளூரில் (கொழும்பு) உள்ள திறன் வாய்ந்தவர்கள் 1,500 பேருக்கு பணி வழங்கவிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரையும் உலகளாவிய பணிகளுக்கு ஹெச்.சி.எல். பயன்படுத்தவுள்ளது.
இலங்கையில் கால்பதித்த ஹெச்.சி.எல். - புதிதாக 1,500 வேலைவாய்ப்புகள்!
கொழும்பில் கால்பதித்த 18 மாதங்களுக்குள் புதிய பணியாளர்கள், அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்கள் என 1,500 க்கும் மேற்பட்ட உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்க ஹெச்.சி.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உள்ளூரில் முடங்கிக் கிடக்கும் திறன்களை உலகளாவிய பணிகளுக்குப் பயன்படுத்த நோக்கில் இந்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எச்.சி.எல்
பிப்ரவரியில், ஹெச்.சி.எல். இலங்கையின் முதலீட்டு வாரியத்துடன் கைகோர்த்து, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது. மேலும், அதன் முதல் விநியோக மையத்தையும் அங்கு அமைத்தது. இம்மையத்தின் மூலம் நிறுவனமானது, உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு பயன்பாடுகள், கணினி ஒருங்கிணைப்பு சேவைகள், உள்கட்டமைப்பு போன்ற சேவைகளை வழங்கும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.