தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கூகுள் பிக்ஸல் போன்களைப் பற்றி கசிந்த தகவல்!

கூகுள் பிக்ஸல் 3a மற்றும் கூகுள் பிக்ஸல் 3a XL ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாகும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த புதிய போன்கள் 64 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் ஐரிஸ் போன்ற மூன்று நிறங்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

கூகுள் பிக்சல் 3a மற்றும் கூகுள் பிக்சல் 3a XL

By

Published : Mar 29, 2019, 1:53 PM IST

பட்ஜெட் போன் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த தயாரிப்பை உருவாக்கியுள்ள கூகுள் நிறுவனம், பல அட்டகாசமான வசதிகளை சேர்த்துள்ளதாகவும் தெரிகிறது. ஜெர்மனி செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஒரு தகவலின்படி, கூகுள் நிறுவனம் தங்களது தயாரிப்புகளுக்கு பிக்ஸல் 3a மற்றும் பிக்ஸல் 3a XL என பெயர் வைக்க முடிவெடுத்துவிட்டதாக தெரிகிறது.

கூகுள் பிக்ஸல் 3a மற்றும் கூகுள் பிக்ஸல் 3a XL

இந்த போன் கறுப்பு, வெள்ளை மற்றும் ஐரிஸ் என்னும் (ஊதா-நீலம்) நிறங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது. கூடுதல் தகவல்படி, இந்த பட்ஜெட் போன்கள் 36 ஆயிரம் ரூபாய் முதல் இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

4 ஜிபி ரேம், 18W விரைவாக சார்ஜ் செய்யும் வசதி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வசதியையும் இந்த போன் பெற்றுள்ளது. ஆனால் இதுவரை கூகுள் பிக்ஸல் 3a மற்றும் கூகுள் பிக்ஸல் 3a XL ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி பற்றிய தகவல் ஏதும் கசியவில்லை.

ABOUT THE AUTHOR

...view details