தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கூகுள் பே மூலம் பணம் அனுப்பினால் கூடுதல் கட்டணமா? - குழப்பத்திற்கு நிறுவனத்தின் பதில்! - கூகுள் நிறுவனம் அறிக்கை

கூகுள் பே மூலமாக பணம் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் பொய்யானது என கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கூகுள்
கூகுள்

By

Published : Nov 25, 2020, 4:41 PM IST

தற்போது ஏராளமானோர் தங்கள் மொபைல் சாதனத்தில் கூகுள் பே பயன்படுத்தி டிஜிட்டல் (எண்ம) முறையில் பணம் செலுத்துகின்றனர். நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ பணம் அனுப்பவும் இந்தச் செயலிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அண்மையில், கூகுள் நிறுவனம் உடனடி பணப் பரிமாற்றத்திற்கும் கட்டணம் வசூலிக்க முடிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதைக் கேட்ட பயனர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இதற்கு கூகுள் தரப்பில் மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் உள்ள பயனர்கள் யாருக்கும் கூகுள் பே மூலமாகப் பணம் அனுப்பினால் வழக்கம்போல கட்டணம் எதுவும் கிடையாது. அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தவறுதலாக இந்தியா எனத் தகவல் பரவிவருகின்றது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த வாரம் பல புதிய வசதிகளை கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details