அமெரிக்காவின் பாதுகாப்புத் தொடர்பான விஷயங்களை அந்நாட்டின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பு கண்காணித்துவருகிறது. மேலும், பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கை, உள்நாட்டு அச்சுறுத்தல்கள், குற்றச் செயல்கள் ஆகியவற்றையும் இந்த அமைப்பு தீவிரமாக கண்காணித்துவருகின்றது.
சமூக வலைதளங்களை கண்காணிக்க வந்துவிட்டார் பிக்பாஸ்! - Social media
வாஷிங்டன்: எஃப்.பி.ஐ. எனப்படும் அமெரிக்காவின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பு, சமூக வலைதளங்களை கண்காணிக்க பிரத்யேக மென்பொருள் கருவிகளை தயாரித்துக் கொடுக்குமாறு முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், டிஜிட்டல் உலகில் மறைமுகமாக நடைபெற்றுவரும் பல்வேறு குற்றங்களை கண்டறிந்து தீர்க்கும்விதமாக சமூக வலைதளங்கள், மின் அஞ்சல்கள், செல்லிடப்பேசிகளுக்கு வரும் அழைப்புகள் என அனைத்தையும் தீவிரமாக கண்காணிக்க அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.
இதற்காக அனைத்துவித சமூக ஊடகங்களில் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு பிரத்யேகமான மென்பொருள் கருவிகளை தயாரித்துக் கொடுக்குமாறு முன்னணி நிறுவனங்களுக்கு அமெரிக்க உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.