ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள், தங்களது நேரத்தை ஆன்லைன் செயலிகளில் செலவிட்டு வருகின்றனர். ஜூம், கூகுள் மீட் போன்ற ஆன்லைன் வீடியோ கான்ஃபரன்சிங் செயலிகளை பயன்படுத்தும் மக்களுக்காக ஃபேஸ்புக் நிறுவனம் 'மெசஞ்சர் ரூம்' என்ற வீடியோ கால் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரூமினை ஃபேஸ்புக் , மெசஞ்சர் செயலி மூலமாகவும் உருவாக்கிக் கொள்ளலாம்.
ஃபேஸ்புக் வீடியோ கால் முக்கிய அம்சங்கள்:
- உலகெங்கும் வசிக்கும் மக்களுடன் கலந்துரையாட முடியும்
- சுமார் 50 நபர்கள் பங்கேற்கலாம்
- கால அவகாசம் எதுவும் கிடையாது (no time limit)
- ஃபேஸ்புக் கணக்கு இல்லாதவர்களுடனும் கலந்துரையாடலாம்