கரோனா நோய்த் தொற்றினால் முடங்கி கிடக்கும் ஐடி நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், நான்கு மாத வாடகை விலக்கை இந்திய தொழிற்நுட்ப பூங்கா கழகத்தின் கீழ் வரும் நிறுவனங்களுக்கு அளிக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
இதில் பெரிதும் சிறு, குறு, முதல்நிலை நிறுவனங்களே இருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் 60 தொழில்நுட்பப் பூங்காவில் இயங்கும் 200 சிறு, குறு ஐடி நிறுவனங்கள் பயன்பெறும் என்று கூறப்படுகிறது.
அவர்கள் பயன்பெற, மார்ச் 1, 2020 முதல் ஜூன் 30வரையிலான வாடகைக்கு விலக்கு அளிக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஏற்றத்தில் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தை!
இந்த வாடகை விலக்கின் மூலமாக அரசுக்கும் 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் 3000 ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டுதான் இந்த முடிவை எடுத்திருப்பதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியிருக்கிறது.