தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ரூ.139 கோடி கடன் முதலீடுகளை ஈர்த்த பாரத்-பே - tamil business news

இந்தியாவின் வணிக பண பரிமாற்றங்களை மேற்கொண்டுவரும் நிறுவனமான பாரத்-பே, அல்டெரியா கேபிட்டல் முதலீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ.90 கோடியும், ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து ரூ.49 கோடியும் கடன் முதலீடாக பெற்றுள்ளது.

business news in tamil, tamil business news, latest business news, Alteria Capital, ICICI Bank, BharatPe, BharatPe funding, பாரத் பே, பாரத்பே, ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து ரூ 49 கோடி, அல்டெரியா கேபிட்டல் ரூ 90 கோடி முதலீட்டு, BharatPe raises Rs 139 cr debt, alteria capital invested in bharatpe, icici bank invested in bharatpe, அல்டெரியா கேபிட்டல், ஐசிஐசிஐ வங்கி
ரூ.139 கோடி கடன் முதலீடுகளை ஈரத்த பாரத்-பே

By

Published : Jan 18, 2021, 6:53 PM IST

Updated : Jan 18, 2021, 7:54 PM IST

டெல்லி: வணிக பணபரிமாற்ற நிறுவனமான பாரத்-பே, ரூ.139 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.

அல்டெரியா கேபிட்டல் முதலீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ.90 கோடியும், ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து ரூ.49 கோடியும் கடன் முதலீடாக பெற்றுள்ளது. இதுவரையில் ரூ.199 கோடி முதலீட்டை பாரத் பே நிறுவனம் ஈர்த்துள்ளது. கடந்த வாரம் இன்னோவென் கேப்பிட்டல் முதலீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ.60 கோடியை நிறுவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக 250 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க பாரத் பே நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்த முதலீடுகள் மூலம் சிறுகுறு நிறுவனங்களில் வணிக பணப் பரிமாற்றங்களை மேம்படுத்த அந்நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.

இங்கிலாந்தில் 5ஜி சேவையை விரிவுப்படுத்த டிசிஎஸ் நிறுவனம் தேர்வு!

அதுமட்டுமில்லாமல், சிறுகுறு வணிகர்களுக்கு குறைந்த வட்டியில் சிறு தொகையை கடனாக வழங்கவும், 2021ஆம் வணிக ஆண்டிற்குள் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பாரத் பே சேவையை விரிவுப்படுத்தி, செயலியின் மூலம் அனைத்து விதமான டிஜிட்டல் சேவைகளை வழங்கப்போவதாக நிறுவனத்தின் தலைவர் சுஹைல் சமீர் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 18, 2021, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details