தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கேம் பிரியர்களா நீங்கள்... அமேசான் பிரைம் வழங்கும் புதிய வசதி! - பல ஆன்லைன் கேம்ஸ்

பெங்களூரு: பிரபலமான கேம்மில் பணம் செலுத்தி விளையாட வேண்டிய சுற்றுகளை இலவசமாக அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் விளையாடலாம் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ே்ே்
ே்ே்

By

Published : May 7, 2020, 11:10 PM IST

ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள், தங்களது நேரத்தைப் படம் பார்ப்பதிலும், கேம்ஸ் விளையாடுவதிலும் தான் செலவிட்டு வருகின்றனர். அதன்படி, புதிய திரைப்படங்கள், சீரிஸ்களை வெளியிடும் அமேசான் பிரைம் , நெட் ஃபிளிக்ஸ் போன்ற ஆன்லைன் செயலிகள் பக்கம் மக்கள் திரும்பியுள்ளனர்.

குறிப்பாக அமேசான் பிரைம் செயலி தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்கிறது. அந்த வகையில், தற்போது கேம்ஸ் பிரியர்களை அமேசான் நிறுவனம் டார்கெட் செய்துள்ளது. பல ஆன்லைன் கேம்ஸ்களில் சில சுற்றுகள் விளையாட பணம் செலுத்த வேண்டும் அல்லது கேமஸில் குறிப்பிட்ட நாணயங்கள் கிடைத்தால் தான் விளையாட முடியும்.

இதனால், கேமஸ் விளையாடுபவர்கள் ஒரு சில சுற்றுக்குப் பிறகு அதை விட்டுவிட்டு அடுத்த கேம்ஸூக்கு தாவிவிடுவர். இதைக் கருத்தில் கொண்டு, அமேசான் நிறுவனம் தனது பிரைம் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் உலகளவில் பிரபலமான மொபைல் லேஜன்ட், பேங் பேங், கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போன்ற கேம்களில் உள்ள சுற்றுகள் அனைத்து இலவசமாக அணுகலாம் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அக்‌ஷய் சாஹி கூறுகையில், "இச்சேவையைப் பிரைம் உறுப்பினர்கள் இலவசமாக அணுகுவதில் மகிழ்ச்சியடைகிறோம். வரும் காலத்தில் பிரபலமான அனைத்து கேம்களும் பட்டியலில் சேர்க்கப்படும் " என்றார்.

இந்தப் புதிய வசதி சீரிஸ் பிரியர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், கேம்ஸ் விளையாடுவதை முழு நேர வேலையாக கொண்டிருப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். பலர் அமேசான் பிரைமில் தங்களை இணைத்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறார்கள்.

இதையும் படிங்க:சியோமியின் எம்ஐ 10 ஸ்மார்ட்போன் வெளியீடு தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details