இந்தியாவின் முன்னணி பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் வண்ணம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் அஸ்வனி லோஹானி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, 'வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் பயணிகளின் சேவையை மேம்படுத்தும் விதமாக புதிய கட்டண சலுகையை அமல்படுத்தவுள்ளோம். பயணச்சீட்டை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் டிக்கெட் முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்யவோ அல்லது பயண நேரத்தை மாற்றம் செய்யவோ வரும் மே 1ஆம் தேதி முதல் கட்டணங்கள் ஏதும் பிடித்தம் செய்யப்படாது' எனத்தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி சலுகை
டெல்லி: முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை மாற்றம், ரத்து செய்யக் கட்டணங்கள் பிடித்தம் செய்யப்படாது என்ற அதிரடி அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Air India
பெரும்பாலும், முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டை ரத்து செய்ய 30-60 விழுக்காடு அடிப்படையில் கட்டணம் பிடிக்கப்படுவது வழக்கம். சில சமயங்களில் தேதி, எண்ணிக்கை ஆகியவற்றில் தவறு ஏற்பட்டு பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தவுடன் ரத்து செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற கவனக்குறைவுகளால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவே தனது வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேரத்தில் மாற்றமோ அல்லது ரத்து செய்வோ இலவச கட்டண சலுகையை வழங்கியுள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.