தமிழ்நாடு

tamil nadu

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

By

Published : Mar 20, 2020, 7:39 PM IST

மும்பை: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை ஏப்ரல் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

yes-bank-founder-rana-kapoor-sent-to-judicial-custody-till-april-2
yes-bank-founder-rana-kapoor-sent-to-judicial-custody-till-april-2

நிதி முறைகேடு செய்த வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மார்ச் 7ஆம் தேதி சிபிஐ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ராணா கபூரை அமலாக்கத் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் மார்ச் 11ஆம் தேதி வரை அனுமதி வழங்கியது.

மார்ச் 11ஆம் தேதி அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் ராணா கபூர் ஆஜர்படுத்தியபோது, அமலாக்கத் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மார்ச் 16ஆம் தேதி வரை அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து மீண்டும் அமலாக்கத் துறை சார்பில் மார்ச் 20ஆம் தேதி வரை ராணா கபூரிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டது. பின்னர் மார்ச் 20ஆம் தேதி வரை ராணா கபூரின் காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அமலாக்கத் துறை சார்பாக 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுத்தபோது, யெஸ் வங்கி, டிஹெச்எஃப்எல் நிறுவனங்கள் செய்த முறைகேடுகள் குறித்து சில வாய்மொழி தகவல்களை கூறியதாகத் தெரிகிறது. இதனிடையே ராணா கபூரை ஏப்ரல் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை

ABOUT THE AUTHOR

...view details