அமெரிக்காவில் மாதம் இருமுறை வெளிவரும் புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை, தற்போது ஒரு நிமிடத்தில் இணையதளத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை விளக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இணையத்தில் ஒரு நிமிடத்தில் எது வேண்டுமானாலும் நேரலாம், மாறலாம்... - internet
அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழ், இணையதளத்தில் ஒரு நிமிடத்துக்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பது குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
ஒரு நிமிடத்தில் சுமார் 4 லட்சம் செயலிகள் டவுண்டலோட் செய்யப்படுவதாகவும் சுமார் 188 கோடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு நிமிடத்தில் ஒரு கோடி பேர் ஃபேஸ்புக் உள்ளே நுழைவதாக குறிப்பிட்டுள்ள அதில், நிமிடத்துக்கு 87,500 போர் ட்வீட் செய்வதாகவும், 42 கோடி மெசேஞ் வாட்ஸ்ஆப் மற்றும் மெசஞ்சரில் மட்டும் அனுப்பப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இணையத்தில் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 10 லட்சம் டாலர் மதிப்பிற்குப் பணப் பரிமாற்றம் நடப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. யூடியூப்பில் ஒரு நிமிடத்துக்கு 45 லட்சம் வீடியோக்களும் கூகுளில் 38 லட்சம் தேடல்களும் நடைபெறுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.