தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்தியாவின் மிக சக்திவாய்ந்த லோகோமோட்டிவ் WAG-12 ரயில் எஞ்சின் ஹிசருக்கு வந்தது! - லோகோமோட்டிவ் WAG-12

WAG-12 எஞ்சினானது 150 பெட்டிகளுடன் ஒரு ரயிலை இழுக்கும் திறன் கொண்டது. இது சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல், பாதுகாப்பான, கனமான சரக்கு ரயில்களை நாடு முழுவதும் இழுத்து செல்ல உதவியாக இருக்கும்.

Indias most powerful locomotive WAG 12
Indias most powerful locomotive WAG 12

By

Published : Sep 17, 2020, 7:19 PM IST

டெல்லி:இந்திய ரயில்வே 'மிக சக்திவாய்ந்த 12,000 குதிரை வேகத் திறன் கொண்ட லோகோமோட்டிவ் WAG-12 ரயில் எஞ்சினை மேட் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டில் உற்பத்திசெய்து சோதனையிட்டு வருகிறது.

இந்த எஞ்சின் மூலம் 150 ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்ல முடியும். பிகாரில் உள்ள ரயில்வேயின் மாதேபுரா தொழிற்சாலையில் அரசாங்கத்தின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட இந்த ரயில் எஞ்சினை அடுத்து, இதேபோல சுமார் 800 எஞ்சின்களின் வடிவமைக்கும் பணி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

ஹரியானா ஹிசாருக்கு வந்த இந்த ரயில் எஞ்சினை குறித்து, ரயில்களை இயக்குபவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், எஞ்சினின் கட்டமைப்பு குறித்தும், அதன் அம்சம்சங்கள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. இதை இயக்குபவர்களுக்கு கழிப்பறை வசதி, குளிர்சாதன வசதி செய்துதரப்பட்டுள்ளது.

WAG 12 ரயில் எஞ்சினின் எடை 180 டன் ஆகும். இந்த ரயில் இயந்திரத்தின் தொடர் 60020 முதல் தொடங்குகிறது. இதன் நீளம் 35 மீட்டர். இதன் அதிகபட்ச வேகம் 100 கி.மீ - 120 கி.மீ வரை செல்லக்கூடும்.

ABOUT THE AUTHOR

...view details