தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தங்கம் சவரனுக்கு ரூ.40 சரிவு - சென்னை

சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று காலை கிராமுக்கு ரூ.5 குறைந்து சவரனுக்கு ரூ.36 ஆயிரத்து 120 என விற்பனையாகிறது.

Today Gold Rate in Chennai
Today Gold Rate in Chennai

By

Published : Jul 7, 2021, 11:34 AM IST

ஹைதராபாத் : தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. வர்த்தகத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை (ஜூலை 5) 24 காரட் தூய தங்கம் கிராமுக்கு ரூ.12 குறைந்து 8 கிராம் ரூ.38 ஆயிரத்து 656 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 980 ஆக விற்பனையானது. இந்நிலையில் இன்று (ஜூலை 7) கிராமுக்கு ரூ.5 குறைந்து காணப்படுகிறது.

இந்த விலை ஏற்ற இறக்கங்கள் 22 காரட் ஆபரணத் தங்கத்திலும் காணப்படுகின்றன. அந்த வகையில் இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4 ஆயிரத்து 515 என விற்பனையாகிறது.

வெள்ளியை பொறுத்தவரை கடந்த இரு தினங்களாக கிராம் ரூ.75 மற்றும் ரூ.75.20 என உச்சம் தொட்ட நிலையில் இன்று ரூ.74.10 என விலை நிர்ணயிக்கப்பட்டு ஒரு கிலோ வெள்ளி ரூ.74 ஆயிரத்து 100 ஆக விற்பனையாகிறது.

வரும் நாள்களில் சுபமுகூர்த்த தினம் அதிகமிருப்பதாலும், கரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாலும் தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதையும் படிங்க : உங்கள் நகரத்தில் தங்கத்தின் விலை என்ன?

ABOUT THE AUTHOR

...view details